ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் காங்கிரசுக்கும் தொடர்பு உள்ளது - ரவிசங்கர் பிரசாத்..!!

Senthil Velan

திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (14:13 IST)
ஹிண்டன்பர்க்  அறிக்கைக்கும், காங்கிரசுக்கும் தொடர்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
 
அதானி குழுமம் நிதி முறைகேடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவரும், அவரது கணவரும் பங்குகள் வாங்கி வைத்திருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் மத்திய அரசை கடுமையாக சாடி இருந்தார்.
 
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான ரவிசங்கர் பிரசாத், ஹிண்டன்பர்க் அறிக்கை மீண்டும் இந்திய மக்களிடையே பேசும் பொருளாக மாறி உள்ளது என்றார்.  ஹிண்டன்பர்க்  அறிக்கைக்கும், காங்கிரசுக்கும் தொடர்பு உள்ளது என்று  அவர்  குற்றம் சாட்டியுள்ளார்.
 
இந்திய மக்களால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ், பொருளாதார அராஜகத்தை உருவாக்குவதிலும், இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளதாக ரவிசங்கர் பிரசாத்  கூறினார்.

ALSO READ: தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் இதுதான் நடக்கும்.! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!
 
பங்குச் சந்தை சீராக இயங்குவதை உறுதி செய்வது செபியின் சட்டப்பூர்வப் பொறுப்பு என்று கூறிய ரவிசங்கர் பிரசாத், ஹிண்டன்பர்க்கிற்கு எதிராக செபி நோட்டீஸ் அனுப்பியபோது, ​அதற்கு எந்த பதிலையும் கொடுக்காமல், இப்போது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்