குறிப்பாக அப்பாவி பொதுமக்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்றும் அந்த பணத்திற்கு யார் பொறுப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் மோடி அரசில்தான் பங்கு சந்தை குறித்து குறை கூறி வரும் ராகுல் காந்தி அதே பங்குச்சந்தையில் கடந்த ஐந்து மாதங்களில் 46.5 லட்சம் ரூபாய் லாபம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, இன்போசிஸ், டிசிஎஸ், டைட்டன் கம்பெனி உள்ளிட்ட பல நிறுவனங்களில் ராகுல் காந்தி 4 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்திருப்பதாகவும் அவர் முதலீடு செய்த பங்குகளின் தற்போதைய மதிப்பு 4 கோடியே 80 லட்சம் அளவில் இருப்பதாகவும் இதனால் அவருக்கு 46 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.