நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடி கைது! பெண் உயிரிழந்த வழக்கில் நடவடிக்கை! - ஆந்திராவில் பரபரப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (13:26 IST)

புஷ்பா 2 படத்திற்கு சென்ற பெண் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

 

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை சம்பந்தப்பட்ட சந்தியா தியேட்டர் மீதும், அல்லு அர்ஜுன் மீதும் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சமீபத்தில்தான் புஷ்பா 2 திரைப்படம் 1000 கோடி வசூல் செய்ததை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் இந்த கைது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்