மருத்துவர்கள், செவிலியர்கள் கவுரப்படுத்த நடவடிக்கை - முப்படை தலைமை தளபதி பிபின்ராவத்

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (20:51 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,000 ஐ தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மோடி மாநில முதல்வர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடியோ கான்பரன்ஸிங்  மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று மே 3 ஆம் தேதிக்குப் பின்னரும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொடூர கொரோனா வைரஸ் தடுப்புப் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் கவுரவப்படுத்த நடவடிக்கை மே 3ஆம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விமானப்படை விமானங்கள் பறக்கும் கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பும் நடத்தப்படும் என  முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்