ஆற்றின் நடுவே இரண்டாக உடைந்த பாலம்: இமாசலப்பிரதேசத்தில் பரபரப்பு!!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (19:02 IST)
இமாசலப்பிரதேச மாநிலம் சம்பா நகர் மற்றும் பஞ்சாப் மாநில பதன்கோட் இடையே உள்ள ஆற்றின் நடுவே உள்ள பாலம் இடிந்து விழுந்தது.


 
 
இந்த பாலம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நபார்ட் மூலம் கட்டப்பட்டது. அதன் கட்டுமான பொருட்கள் தரக்குறைவாக இருந்ததால் விபத்து ஏற்பட்டடிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
 
விபத்தின் போது கார், மினி லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் பாலத்தின் மேல் சென்றுக் கொண்டிருந்தது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
 
விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சுதேஷ் குமார் மோஹ்தா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்