கோவையில் பஸ் ஸ்டாண்ட், நாகையில் பஸ் டிப்போ: இடிந்து விழும் அபாயங்கள்

வெள்ளி, 20 அக்டோபர் 2017 (10:18 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன் கோவை அருகே உள்ள சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்து ஐந்து பேர் பலியான சோகமே இன்னும் மக்கள் மனதில் நீங்காத நிலையில் இன்று அதிகாலை நாகையில் உள்ள பேருந்து பணிமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் மூன்று பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.










 


60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருந்த இந்த பணிமனை ஏற்கனவே அபாயகரமாக இருப்பதாக ஊழியர்கள் எச்சரித்தும் நிர்வாகிகளின் அலட்சியத்தால் இன்று 8 உயிர்கள் பலியாகியுள்ளதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அதிகாரிகளை பொதுமக்களும் போக்குவரத்துக் கழக ஊழியர்களும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்