பேருந்திலிருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (15:28 IST)
கேரளாவில் ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து கர்ப்பினி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஈராற்றுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தாஷிதா (வயது 34). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். விடுமுறையின்போது ஊருக்கு வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து செல்வார். இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணியாக இருந்த தாஷிதா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செக்கப்ச் செய்வதற்காக நேற்று சென்றுள்ளார்.

மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு, பேருந்தில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கவே தாஷிதா படியில் நின்றவாறு பயணம் செய்துள்ளார். பேருந்து ஒரு வளைவில் வேகமாக திரும்பியபோது நிலை தடுமாறிய தாஷிதா பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தீவிர சிகிச்சைக்குப்பின் 
தாஷிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது, இருந்த போதிலும் மருத்துவர்களால் தாஷிகாவை காப்பாற்ற முடியவில்லை. தாஷிதா பயணம் செய்த பேருந்தின் டிரைவர் கவனக்குறைவாக செயல்பட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேருந்தில் கர்ப்பிணிகளுக்கு என்று தனி இருக்கை இருக்கும்போது, தாஷிகா அமர்வதற்கு வசதி செய்து கொடுக்காத கண்டெக்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்