மாணவியை காமத்துடன் நீண்ட நேரம் கட்டி பிடித்த மாணவன்: பள்ளி எடுத்த அதிரடி முடிவு!

திங்கள், 1 ஜனவரி 2018 (16:32 IST)
கேரளாவில் திருவனந்தபுரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவன், மாணவி ஒருவரை நீண்ட நேரம் காம நோக்கத்துடன் கட்டிப்பிடித்த குற்றத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த மாணவன் தற்போது தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளான்.
 
12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் புரிந்த சாதனையை பாராட்ட, அந்த மாணவியை காம நோக்கத்துடன் மற்ற மாணவர்கள், ஆசிரியர் முன்னிலையில் நீண்ட நேரம் கட்டிப்பிடித்து நின்றுள்ளான். அதன் பின்னர் ஆசிரியர் அதட்டிய பின்னர் தான் அந்த மாணவியை அவன் விடுவித்துள்ளான்.
 
இதனையடுத்து அந்த பள்ளி நிர்வாகம் அந்த இருவரையும் சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. 12-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் கடந்த ஜூலை மாதம் முதல் 5 மாதங்களுக்கு பள்ளியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.
 
இந்த இடை நீக்கத்தால் அந்த மாணவனின் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுவது பாதிக்கப்படும் நிலை உருவானது. இதனையடுத்து பெற்றோர்கள் நீதிமன்றத்தை நாட மாநில குழந்தைகள் நல ஆணையம் இரு மாணவர்களையும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்தது. மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகளில் பள்ளிகள் எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவித்தது.
 
மாணவன் தேர்வு எழுதும் விஷயத்தில் சிபிஎஸ்இ தான் முடிவெடுக்கும் என பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது. இந்நிலையில் அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதித்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் இதில் தலையிட்டதால் ஒரு முடிவு  கிடைத்துள்ளது என கூறப்படுகிறது. இரு மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் மீண்டு ம்அனுமதித்ததற்கு அவர் நன்றி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்