கடும் வெயிலால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (17:46 IST)
இந்தியாவில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் கடும் வெயிலால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா (எதிர்ப்பு அணி), பாஜக கூட்டணி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள பால்கார் மாவட்டத்தில் ஓசர் வீரா பழங்குடியினர் கிராமத்தில் வசித்தவர் சோனாலி(19). இவர்  9 மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையில்,  இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை  உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து,  அவர் மருத்துவமனைக்கு வெயிலில் 7 கிமீ தூரம் நடந்தே சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு மேலும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவரை பரிசோதித்த  தவா அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ பணியாளர்கள்  அவரை காசாலில் இருக்கின்ற அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.  உடனே பெண்ணின் குடும்பத்தினர், காசா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே அப்பெண் பலியானார். அவர் வயிற்றில் இருந்த 9 மாத சிசுவும் உயிரிழந்தது. கடும் வெயிலில் 7 கிமீ தூரம் நடந்ததால் அவர், உடல்நலம் பாதித்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்