மகனின் பிணத்தை பையில் வைத்து பேருந்தில் எடுத்து சென்ற தந்தை.. ஆம்புலன்சுக்கு பணம் இல்லாததால் சோகம்..!

திங்கள், 15 மே 2023 (15:28 IST)
மேற்குவங்க மாநிலத்தில் தனது மகனின் சடலத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ்க்கு கொடுக்க பணம் இல்லாததால் பையில் பிணத்தை பையில் வைத்து பேருந்தில் எடுத்துச் சென்ற கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் சிலிகுரி என்ற பகுதியில் ஆசிப் தேவ் சர்மா என்பவரின் ஐந்து மாத ஆண் குழந்தை உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் நேற்று இரவு அந்த குழந்தை சிகிச்சையின் பலன் இன்றி உயிர் இழந்ததை அடுத்து குழந்தையை தனது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல பணம் இல்லை இது இல்லாததால் குழந்தையின் சடலத்தை ஒரு பையில் வைத்து 200 கிலோமீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்துள்ளார். 
 
சிகிச்சைக்காக தான் வைத்திருந்த 16,000 ரூபாய் செலவு செய்துவிட்டதாகவும் ஆம்புலன்சில் பிணத்தை கொண்டு செல்ல ரூ.8000 பணம் கேட்டதால் தன்னிடம் பணம் இல்லை என்பதால் பையில் வைத்து சக பயணிகளுக்கு தெரியாமல் பேருந்தில் எடுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்