ஆம்புலன்ஸில் காலணிகள் ஏற்றிச் சென்ற டிரைவர் பணி நீக்கம்!

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:29 IST)
ஆம்புலஸ்ஸில் காலணிகளை ஏற்றிச் சென்ற வீடியோ வைரலாகி விமர்சனம் எழுந்த  நிலையில், டிரைவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மா நிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

ஜெய்பூரில் இருந்து தவுசாவுக்கு சமீபத்தில், ஆம்புலன்ஸில் காலணிகளை தவுசா அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஏற்றிச் சென்றார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

சமூக வலைதளங்களில் இதற்குக் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தவசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷிவராம், மீனா, டிரைவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‘’தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸை தவறாகப் பயன்படுத்திய டிரைலரை பணி நீக்கம் செய்துவிட்டோம். இதுகுறித்து விசாரிக்க ஒரு குழு அமைத்திருக்கிறோம்.

குற்றம்சாட்டப்பவர்கள் மீது வழங்குப்பதிவு செய்யப்படும் எனவும்,  நேற்றுதான் இது என் கவனத்திற்கு வந்ததாகவும், இதுபற்றி விசாரணை  நடத்தப்பட்டு வருவதாகவும்’’ அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்