இங்குள்ள கிராந்தி என்ற பகுதியைச் சேர்ந்த ஜாய் கிருஷ்ண தீவான். இவரது மகன் ராம் பிரசாத். ஜாய் கிருஷ்ணாவின் மனைவி லக்கி தீவானுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சமீபத்தி. ஜல்பாய்கூரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், சொந்த ஊருக்கு அவரது சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸை கேட்டுள்ளனர்.
இதற்கு ரூ.3000 கட்டணம் கேட்டதால், அதைத் தரமுடியாத நிலையில், தன் தாயின் சடலத்தை தோளில் சுமந்து சில் கிமீ தூரம் நடந்து வந்துள்ளார் ராம்பிரசாத்.