மனைவியின் ஆசையை நிறைவேற்றாத கணவன்..மனைவியின் திடீர் முடிவு !

Webdunia
ஞாயிறு, 5 ஜனவரி 2020 (12:33 IST)
திருமணம் நடைபெற்று முடிந்த பின், முதல் இரவில் புதுப்பெண் தனது கணவனிடம் சில வேண்டுகோள் விடுத்துள்ளார். பின்னர் மறுநாள் காலையில் கணவன் அதை நிராகரிக்கவே அப்பெண் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஹரியானா மாநிலம் சிகாச்ராவுலி என்ற பகுதியில் அமைந்துள்ள, மாலிக்பூரில்  வசித்து வருபவர் குல்பாம். இவருக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
 
அதன்பின், முதலிரவின் போது, புதுப்பெண், தான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், இங்குள்ள சூழ்நிலை அதற்கேற்றது போன்று இல்லை. அதனால் தனகேற்ற மாதிரி வசதியுள்ளதாக வீட்டை மாற்ற வேண்டும் என கூறியுள்ளதாகத் தெரிகிறது.
 
அதன்பின், காலையில், குல்பாம், தனது மனைவியிடன் இதே நிலைதான் வீட்டில் தொடரும் என கண்டிப்பாக கூறியுள்ளார்.
 
அதனால் மனம் உடைந்த பெண், தனது தாயாரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்