குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற பகுதியில் கடந்த ஞாயிறு அன்று தொங்குபாலம் விழுந்து சுமார் 130க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீட்பு நடவடிக்கையில் மீட்புப்பணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
மோர்பி தொங்குபாலம் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நவம்பர் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்