ஆற்றில் அமிழ்ந்துபோன உயிர்களுக்கும் என் வலிமிகுந்த அஞ்சலி- வைரமுத்து

திங்கள், 31 அக்டோபர் 2022 (14:41 IST)
குஜராத் மாநிலம் மோர்பில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த பலர் உயிரிழந்த சம்பவத்திற்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில்  முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம்,  ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் சவுத்தில், தண்டி யாத்ரா மார்க் என்ற இடத்தில் சமீபத்தில், ஒரு புதிய மேம்பாலம் கட்டப்பட்டு இதன் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், விரைவில் இதற்கான திறப்பு விழா நடத்தப்பட இருந்த நிலையில் இடிந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியது.

இதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் மோர்பி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் நேற்று மாலை அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 177 பேர் மீட்கப்பட்டனர்.  சில  நாட்களுக்கு முன், நிலையில் நேற்று  நடந்த சம்பவமும்  நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ALSO READ: என் வாழ்வில் இப்படி ஒரு வேதனையை பார்க்கவில்லை! – குஜராத் விபத்து குறித்து பிரதமர் உருக்கம்!
 
இந்த தொங்குப் பாலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் பாலத்தை ஆட்டியதால் மொத்தமாக அறுந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து இரங்கல் டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், குஜராத்தில்
ஆற்றில் அமிழ்ந்துபோன
அத்துணை உயிர்களுக்கும்
என் வலிமிகுந்த அஞ்சலி;
குடும்பத்தார்க்கு இரங்கல்

சாவுகளின்
எச்சரிக்கை இதுதான்:

ஒரு பாலம் அல்லது
எந்திரத்தின் தாங்குதிறன்
ஒரு கோயில் அல்லது திடலின்
கூடுதிறன் ஆகியவற்றைக்
கணக்கீடு செய்து
காவல்புரியும்
காலம் வந்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்