இரண்டு இதயங்கள், நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (19:30 IST)
ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு இதயம், நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள கங்கா ராம் மருத்துவமனியில், மார்ச் 5 ஆம் தேதி 19 வயதுள்ள ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் கைலாஷ்,  சோனே கிராம்பி செய்தார். அதில், வயிற்றில் உள்ள சிசு, விசித்திரமாக இருப்பதைக் கண்டறிந்தார்.

பெண்ணுக்கு சில மணி நேரத்தில் பெண் குழந்தை  பிறந்தது. பிரசவத்திற்கு பின் 20 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்த குழந்தை பின்னர், இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இக்குழந்தைக்கு ஒரு தலை, நான்கு கால்கள், நான்கு கைகள் மற்றும் இரண்டு இரண்டு இதயங்கள், இரண்டு முதுகெலும்புகளுடன் இருந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், பெண்ணுக்குச் சுகப்பிரசவம் செய்ய எங்களுக்குச் சிரமாக இருந்ததாகவும் சரியான  நேரத்தில் பிரசவம் செய்து கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றியதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்