''விவசாயிகளுக்கு 2000 யூனிட் மின்சாரம்'' -ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (22:26 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான  அமைச்சரவையின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டியில், பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், மாதம் தோறும் 11 லட்சத்திற்கு மேலான விவசாயிகளுக்கு 2000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 76 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.500 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.

2004 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த்த பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கால்நடை வளர்ப்போருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த பட்ஜெட் மக்களின் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்