பூரி ஜெகநாதர் கோயிலில் அத்துமீறி நுழைந்த 9 பேர் கைது!

Sinoj
திங்கள், 4 மார்ச் 2024 (14:44 IST)
ஒடிசா  மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலில் அத்தமீறி நுழைந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
ஒடிசா மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரம் பூரி. இங்கு  பிரசித்தி பெற்ற ஜெகநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவில்  12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு நடைபெறும் ரதயாத்திரை உலகப் புகழ்பெற்றதாகும். 
 
பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழைய அனுமதி இல்லாத நிலையில், இக்கோயிலுக்குள் அத்துமீறி  நுழைந்த 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
பூரி ஜெக நாதர் கோயிலுக்குள் வங்கதேசத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 9 பேர் விதிமுறைகளை மீறி கோயிலுக்குள் நுழைந்தபோது,  விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 
 
அதன்பின்னர், 9 பேர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில், போலீஸார்  சம்பவ இடத்திற்கு வந்து சுற்றுலாப்பயணிகளை  விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் என காவல்துறை  அதிகாரி தெரிவித்தார்.
 
இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்