கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான்: 500ஐ நெருங்குகிறது இந்தியாவின் மொத்த பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (07:45 IST)
தென் ஆப்பிரிக்கா நாட்டில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவில் முதல் ஒமிக்ரான் வைரஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர்கள் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிதாக 7 பேருக்கு மிகிரான் தொற்று உறுதியான நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 456 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் உள்பட 6 மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 500ஐ நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்