மேலும் 39 பேருக்கு ஒமிக்ரான் - தமிழக அப்டேட்!

சனி, 25 டிசம்பர் 2021 (15:23 IST)
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

 
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் இதுவரை 17 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிக பரவல் உள்ள மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறுதுறை சார்ந்த நிபுணர்களை கொண்ட மத்தியக்குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த மத்தியக்குழு தமிழகத்துக்கு வருகை தர உள்ளது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பை உறுதி செய்ய 39 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
 
மேலும், தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர். ஏற்கனவே 3 பேர் குணமடைந்த நிலையில் மேலும் 9 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்