இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் இதுவரை 17 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிக பரவல் உள்ள மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறுதுறை சார்ந்த நிபுணர்களை கொண்ட மத்தியக்குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த மத்தியக்குழு தமிழகத்துக்கு வருகை தர உள்ளது.
தமிழகத்தைப் போலவே கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி, பீகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், மிசோரம் மாநிலங்களுக்கும் இந்த குழு செல்ல உள்ளது.