பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

Siva
திங்கள், 16 செப்டம்பர் 2024 (18:32 IST)
பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள் மற்றும் 26 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
 
18வது மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றார். இதன் ஒரு பகுதியாக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
 
இதையடுத்து, கடந்த 100 நாட்களில் நாட்டில் நடந்த சம்பவங்களை முன்வைத்து, பாஜக அரசை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி பல போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. அதில், 100 நாட்களில் 38 ரயில் விபத்துகள் நிகழ்ந்து, 21 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், பாஜக தேர்தல் பிரசாரத்தில், பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 100 நாட்களில் 26 பயங்கரவாத தாக்குதல்கள் காஷ்மீரில் நடந்ததாகவும், இதில் 21 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 15 பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
அதேபோல், இந்த 100 நாட்களில் 104 பெண்கள் மீது குற்றச் செயல்கள் நிகழ்ந்ததாகவும், சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைந்தது, நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் தேங்கியது, சுதர்ஷனா சேது சாலை சீரழிந்தது உள்ளிட்ட 56 அரசு கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்