விஷ உணவு சாப்பிட்ட 27 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (18:01 IST)
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில்  உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, குமட்டல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்காகா ராஸ்ட்ரிய சமிதி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில் உள்ள அடிலாபாத் என்ற  நகரில் ககா பகுதியில் இயங்கி வரும் சிறுபான்மையின மாணவர்களுக்கான விடுதியில்,  நேற்றிரவு மாணவர்கள் சாப்பிட்டு உறங்கச் சென்றபோது, அவர்களில் 27 பேருக்கு வாந்தி, குமட்டல் ஏற்பட்டது.

உடனே அந்த மாணவர்கள் அனைவரும், அருகிலுள்ள  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு  உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த  32 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும்,6 பேர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்ட்டுள்ளனர்.

ALSO READ: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயர் மாற்றமா? மருத்துவ பேராசிரியர்கள் எதிர்ப்பு!

இதுகுறித்து விசாரணை நடத்த, மாவட்ட மாஜிஸ்திரேட்  பிரபாகர் ரெட்டி உத்தரவிட்டிருந்தார்,

அதில், சிறுபான்மை மாணவர்கள் விடுதியில் ஆள்பற்றாக்குறை காரணமாக, சமையல்காரர், உணவுப்பொருட்களை கழுவாமல் சமைத்ததாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்