சேப்பாக்கம் தொகுதிக்குள் விசிட் அடித்த உதயநிதி: வைரல் புகைப்படங்கள்

வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (18:20 IST)
சேப்பாக்கம் தொகுதிக்குள் விசிட் அடித்த உதயநிதி: வைரல் புகைப்படங்கள்
சென்னை சேப்பாக்கம் தொகையை கூறு அந்த தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி விசிட் அடித்து பொதுமக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
மாற்றுத்திறனாளிகள் மணல் கடந்து கடல் அலையை கண்டு ரசித்திட, நிரந்தர நடைபாதை அமைத்து தரவேண்டுமென நான் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் மெரினாவில் நடைபெற்றுவரும் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டோம்.
 
திருவல்லிக்கேணி முத்தையா தோட்ட தெருவில் அமைந்துள்ள சலவைக்கூடத்தை இன்று பார்வையிட்டு, மக்களின் தேவைகளை  கேட்டறிந்தோம். சிதலமடைந்த வீடுகளை சீரமைத்தும், சலவைக்கூடத்திற்கு நிழற்கூடாரமும் அமைத்து தரவேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தோம்.
 
இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைபெற வரும் நிலையில், அப்பகுதிக்கான பன்னோக்கு மருத்துவ மனையின் அவசியம் உணர்ந்து, வளாகத்தில் புதிய மருத்துவமனை அமைக்க இடவசதி குறித்து அமைச்சர்  மா சுப்பிரமணியன் அவர்களுடன் இன்று ஆய்வுசெய்தோம்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்