இன்புளுயன்சா காய்ச்சல் - மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லையா?

வியாழன், 15 செப்டம்பர் 2022 (10:32 IST)
காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

 
மழை வெயில் என மாறுபட்ட பருவமழை காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மருத்துவமனையில் 300 படுக்கைகள் இருக்கும் நிலையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டதாகவும் தற்போது கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமின்றி மதுரை திருச்சி கோவை நெல்லை ஆகிய பகுதிகளிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது

இந்நிலையில் தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி ஆகியவை இன்புளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் எனவும் படுக்கைகள் இல்லாமல் மருத்துவமனைகள் நிரம்பி  வருவதாக கூறுவது தவறான தகவல் எனவும் கூறியுள்ளார்.

தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் இன்புளுயன்சா காய்ச்சலானது இருமல் மற்றும் தும்மல் மூலமாக வெளியாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்