மருத்துவமனையில் நடந்த அசம்பாவிதம்… தப்பியோடிய 24 கொரோனா நோயாளிகள்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:45 IST)
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 24 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடியுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் நகரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் அங்கு ஒரு அறையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது கொரோனா நோயாளிகள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றும் போது 24 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடியுள்ளனர்.

அவர்களை தேடும் பணி இப்போது நடைபெற்று கொண்டு வருகிறது. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்