இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, என் பெற்றோருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் உள்ள அனைவரும் உடனடியாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் முடிவுகள் இப்போது வந்துவிட்டன.
துரதிர்ஷ்டவசமாக எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், எனக்கும் எனது மீதமுள்ள குடும்பத்தாரும், பணியாட்களுக்கும் கொரோனா தொற்று இல்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவில் அவர்கள் குணமடைவார்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.