கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்கள் பசவராஜ் – வெங்கம்மா தம்பதியினர். இவர்களது இரண்டு வயது மகன் வெங்கடேஷ்.
இவர்களது பக்க்த்து வீட்டில் இருக்கும் டீக்கடைகாரரின் மகன் புறாக்களை வளர்த்து வந்தார். புறாக்களை பார்க்க வெங்கடேஷ், அடிக்கடி வந்த்தால் அந்த டீக்கடைகாரர் மகன் கண்டித்துள்ளான்.
இந்நிலையில், டீக்கடைகாரர் மகன் இல்லாத போது வெங்கடேஷ் மற்றும் அவனுடைய மூத்த சகோதரர், கூண்டை திறந்து புறாவை பறக்க விட்டுள்ளனர். டீக்கடைகாரர் மகன் வீடு திரும்பிய போது புறா இல்லாதை கண்டு வெங்கடேஷிடம் விசாரித்துள்ளான்.
பின்னர், ரமேஷ் அவனை அழைத்து கொண்டு புறாவை தேடி சென்றுள்ளான். புறாவை கண்டுபிடித்து, அதை பிடித்த ரமேஷ் மகிழ்ச்சியடைந்தான். இதை வெங்கடேஷ் மீண்டும் புறாவை பறக்க விட்டுள்ளான்.
இதனால், ஆத்திரமடைந்த டீக்கடைகாரர் மகன் வெங்கடேஷின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.