ஒரே கேள்வியால் உயிரை விட்ட கர்ப்பிணி பெண்: அப்படி என்ன கேள்வி?

வியாழன், 8 பிப்ரவரி 2018 (15:28 IST)
திருமணமாகாத இளைஞர் ஒருவரிடம் பக்கத்துவிட்டு பெண் எப்பொழுதும் திருமணம் குறித்து கேள்வி கேட்டதால் கோபத்தில் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தோனேசியாவின் கம்பங் பாசிர் ஜோங் பகுதியில் வசித்து வருபவர் பாயிஸ் நூர்தின். 28 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் இவர் சற்று விரக்கிதியில் இருந்துள்ளதாக தெரிகிறது. 
 
இவரின் பக்கத்து வீட்டில் வசித்த திருமணமான கர்ப்பிணி பெண் ஆயிஷா, அந்த இளைஞரிடம், உனக்கு எப்போது திருமணம்? உன் வயது பையன்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. நீயும் சீக்கிரம் திருமணம் என்று அறிவுரை கூறியுள்ளார்.
 
இதுபோன்று பல முறை கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர், அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். ஆயிஷாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். 
 
மேலும், அங்கிருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ஜகார்த்தாவுக்கு தப்பி சென்றுள்ளார். பின்னர் போலீஸார் அந்த இளைஞரை கைது செய்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்