150 அடி தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு..! நெஞ்சை பதற வைக்கும் விபத்து..!

Senthil Velan
சனி, 6 ஏப்ரல் 2024 (18:44 IST)
பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோயில் தேர் திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது.
 
பெங்களூரு நகர் ஆனேக்கல் தாலுகா ஹுஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுராமா கோவிலில் உள்ளது. இங்கு நடைபெறும் ஆண்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர்.

திருவிழாவின் ஒரு பகுதியாக, கோயிலுக்கு சொந்தமான 120 அடி உயரம் கொண்ட தேரை பொதுமக்கள் நகர் பகுதிகளில் இழுத்துச் சென்றனர். அப்போது தேர் எதிர்பாராத விதமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ALSO READ: நாட்டின் கண்ணியத்தை சீர்குலைத்தவர் மோடி..! சோனியா காந்தி விமர்சனம்..!!
 
பொதுமக்கள் ஏராளமாக கூடியிருந்த நிலையில், தேர் கவிழப்போவதை உணர்ந்த அனைவரும் சிதறி ஓடியதால் எந்தவித உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்