116 மொழிகளில் பாடி அசத்தும் 13 வயது மாணவி : வைரல் செய்தி

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (16:05 IST)
கேரளா மாநிலத்தை சேர்ந்த சுச்சிதா (13). இவர் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் 116 மொழிகளில் பாடி அசத்தி எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்து வருகிறார்.
இதுவரை இம்மாணவி 2 உலக சாதனைகள் படைத்துள்ளார் மேலும் 6 மணிநேரத்தில் இவர் 112 மொழிகளில் பாடி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
 
சுச்சிதா முதன்முதலில் ஜப்பானிய மொழிகளில் பாட ஆரம்பித்தார். பின்னர் அனைத்து மொழிகளிலும் ஆர்வம் கூட அனைத்து மொழிகளையும் கற்றுக்கொண்டு அம்மொழிகளில் பாடுவதற்கு பயிற்ச்சி எடுத்துக்கொண்டார்.
 
அதில்,  26 இந்திய மொழிகளில் , 102 உலக மொழிகளிலும் பாடக்கூடியவராக அசாத்திய திறமை பெற்று விளங்குகிறார்.
 
துபாயில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இவர் 102 மொழிகளில் பாடி சாதனை புரிந்துள்ளார்.சுச்சிதா தன் 3 வயதில் பாட ஆரம்பித்தா. இதற்கு அவரது பெற்றோரும் பெரும் ஆதரவு தந்து ஊக்குவித்தனர். அதனால் தன் திறமையை மேலும் மெருகேற்று தனித்திறனுடன் அனைத்து மொழிகளிலும் பாடுபவராக வலம்வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்