இந்தியாவை பொருத்த வரை இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 27 மாநிலங்களில் இந்த கொரோனா பாதிப்பு பரவியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது.
இதிலிருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஓவ்வொரு மாநில அரசுகளும் சிரத்தையுட மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், சிறையில் இருக்கும் 11 ஆயிரம் கைதிகளை பரோலில் அனுப்ப மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
மேலும், ஏழு ஆண்டுகளுக்கு குறைவான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விசாரணைக் கைதிகள் 45 நாட்கள் பரோலில் அனுப்பப்படுகின்றனர். இதற்கான உத்தரவை சிறை அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளதாக அம்மாநில அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.