1710 டோஸ் தடுப்பூசி மருந்து திருட்டு: மருத்துவமனையில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:17 IST)
ஹரியானா மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1,710 தடுப்பூசி மருந்துகள் திருடு போய் விட்டதாகவும் தற்போது பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு ஒரு தடுப்பூசி கூட இல்லை என்றும் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த தடுப்பூசி மருந்துகள் திடீரென திருடு போய்விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையில் புகார் செய்துள்ளது 
 
1270 கோவிஷீல்ட் தடுப்பூசியும் 440 கோவாக்சின் தடுப்பூசியும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தடுப்பூசிகள் திருடு போய்விட்டதாகவும் இதனை அடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒன்று கூட தற்போது மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை என்றும் தனது புகாரில் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 
அரசு மருத்துவமனையில் 1,710 தடுப்பூசிகள் திருடு போய் இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்