லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவது, மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் துரைமுருகன் கவலை தெரிவித்துள்ளார். காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:
வெளிமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்கப்படுவது எதிர்காலத்தில் தமிழக அரசியலை நிச்சயம் பாதிக்கும். குறிப்பாக பிகாரில் உள்ளவர்கள் அங்கேயே வேலைவாய்ப்பை பெற்றிருந்தால் தமிழகம் வந்திருக்க மாட்டார்கள். அவர்கள் இங்கு வந்ததால் இது ஒரு பெரிய சிக்கலாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.