இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 10 ஆயிரத்தில் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதியாவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கோவாக்சின் தடுப்பூசியை முதல் டோஸ் எடுத்துக் கொண்ட 93,56,436 பேரில் 4208 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இரண்டாவது தவணை செலுத்திக் கொண்ட 17,37,178 பேரில் 698 பேருக்கும் கொரோனா உறுதியானதாக கூறப்பட்டுள்ளது.