ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாதல் காரணமாக மனச்சோர்வு, கவலை, மற்றும் குற்ற உணர்வு போன்ற மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தேவையற்ற செலவுகள் நிதி நெருக்கடியையும் உருவாக்கும்.
தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு, கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்ற உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்குங்கள், முடிந்தவரை கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்குவது உடல் இயக்கத்திற்கு உதவும். பொருட்களை உடனடியாக வாங்காமல், சில நாட்கள் கழித்து தேவைதானா என யோசித்து வாங்குங்கள். தேவையில்லாத விளம்பரங்களை தவிர்ப்பதன் மூலம், ஆன்லைன் ஷாப்பிங் ஆசையை குறைக்கலாம். இவ்வாறு அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.