இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'மதராசபட்டினம்' முதல் சமீபத்தில் வெளிவந்த 'தியா' வரை ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தை தழுவி எடுத்திருப்பார் என்பதே நெட்டிசன்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள 'லக்ஷ்மி' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'கராத்தே கிட்' என்ற படத்தை முழுக்க முழுக்க தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
கராத்தே கிட் படத்தில் கராத்தே சண்டை, லக்ஷ்மி படத்தில் டான்ஸ்.
கராத்தே கிட் படத்தில் வில்ஸ்மித் மகன் ஜெர்ரி, லக்ஷ்மி படத்தில் சிறுமி தித்யா
கராத்தே கிட் படத்தில் கராத்தே குருவாக ஜாக்கி சான், லக்ஷ்மி படத்தில் டான்ஸ் குருவாக பிரபுதேவா
கராத்தே கிட் படத்தில் அம்மா கேரக்டரில் ஒரு கருப்பின பெண், லக்ஷ்மி படத்தில் அம்மா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்
கராத்தே கிட் படத்தில் கிளைமாக்ஸில் ஜெயிக்க விடாமல் செய்ய காலை உடைக்கும் போட்டி சிறுவன், லக்ஷ்மி படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன் நடக்கும் விபத்து
இரண்டு படங்களிலும் இறுதியில் டைட்டில் கேரக்டருக்கு கிடைக்கும் வெற்றி. இதுதான் இந்த இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை. எனவே இந்த படத்தை 'கராத்தே கிட்' படத்தை பார்க்காதவர்களும், அந்த படத்தை பற்றி கேள்விப்படாதவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் ஆச்சரியத்தை தரும்
ஒரு ஹாலிவுட் படத்தை இப்படி அப்பட்டமாக காட்சிக்கு காட்சி காப்பியடிக்க இயக்குனர் விஜய்யை தவிர யாராலும் முடியாது. மேலும் டான்ஸ் போட்டிகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவும், தொலைக்காட்சியில் உள்ள டான்ஸ் ஷோக்களை திரும்ப பார்க்கும் வகையில் இருப்பதால் அலுப்பு தட்டுகிறது.
படத்தின் ஒரே சிறப்பு அம்சம் லக்ஷ்மி கேரக்டரில் நடித்திருக்கும் சிறுமி தித்யாவின் அபாரமான நடிப்பு மற்றும் நடனம், பிரபுதேவாவின் நடிப்பு.
மற்றபடி இந்த படத்தில் சொல்லி கொள்ளும் வகையில் எந்தவொரு புதுமையான காட்சிகளோ, திருப்பமோ இல்லை.