எங்க வீட்டு மாப்பிள்ளை; நிகழ்ச்சி முடிந்த பிறகு டோக்கன் ஆஃப் லவ் பெற்றது யார் தெரியுமா?

புதன், 18 ஏப்ரல் 2018 (11:40 IST)
பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆர்யா நடத்தி வந்த 'எங்க வீட்டு மாப்பிள்ளை' ஷோ நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சிமுடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் ஒருவருக்கு மட்டும் ஆர்யா டோக்கன் ஆஃப் லவ் கொடுத்துள்ளார்.
இந்த ஷோவில் இறுதியாக வெற்றிபெறும் பெண்தான் ஆர்யாவின் மனைவி என்று விளம்பரம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. எனவே ஆர்யாவை கைப்பிடிக்கும் அந்த அதிர்ஷ்டசாலி பெண் யார்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
 
மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி கடைசியில் ஐந்து பெண்கள் தேர்வு ஆனார்கள். ஐந்து பேர்களின்  வீடுகளுக்கும் ஆர்யா விசிட் செய்தார். இந்த நிலையில் இந்த ஐந்து பேர்களில் மேலும் இரண்டு பேர் எலிமினேட் ஆன நிலையில், இறுதியாக சுசானா,  சீதாலக்ஷ்மி, அகாதா ஆகிய மூன்று பெண்கள் இருந்தனர்.
 
இந்நிலையில் நேற்றைய இறுதி நிகழ்ச்சியில் அகாதா, சுசானா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் மணக்கோலத்தில் இறுதி சுற்றில் பங்குபெற்றனர். ஆனால் ஆர்யா மூவரில் ஒருவரை தேர்வு செய்யாமல் தட்டிகழித்தது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தபிறகு ஆர்யா சீதாலட்சுமிக்கு மட்டும் ஒரு கிப்ட் கொடுத்துள்ளார். இதுவரை எனக்கு டோக்கன் ஆஃப் லவ் ஆர்யா கொடுத்தது  இல்லை என சீதாலட்சுமி தொடர்ந்து வருத்தப்பட்டு வந்ததால், இன்று ஆர்யா அவருக்கு அதை பரிசளித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதை சீதாலட்சுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மெஹந்தி போடப்பட்ட கையில் டோக்கன் ஆஃப் லவ் அணிந்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்