மீண்டும் விஜய்க்கு ஜோடியாகிறாரா பூஜா ஹெக்டே?

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (08:00 IST)
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருந்த நிலையில் மீண்டும் ஒருமுறை அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க பூஜாஹெக்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து மீண்டும் விஜய்யுடன் ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்