''திருமணம் செய்ய சொல்லி....''சிம்பு வீட்டில் இளம்பெண் தர்ணா போராட்டம்.....

Webdunia
திங்கள், 23 மே 2022 (22:52 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  சிம்புவின் வீட்டின் முன் இளம்  நடிகை ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தனியர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 7சி என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஸ்ரீ நிதி. அதன்பின், அவர், யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

இவர்,  தனது சமூக வலைதளப்பக்கத்தில், ஒரு நாள் எல்லோருக்கும் திருமணம் செய்துகொண்டிருப்பார்கள். ஆனால் நானும் சிம்புவும் சிங்கிளா இருப்போம் என்று தெரிவித்தார். இதற்கு ரசிகர்கள்  விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீ நிதி, இன்று நடிகர் சிம்பு வீட்டின் முன் அமர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்