கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் திடீரென நேற்று பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை குறைவான அளவில் சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 12 புள்ளிகள் சரிந்து 70 ஆயிரத்து 492 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 10 புள்ளிகள் சரிந்து 21,140 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நேற்று மிக மோசமாக சரிந்தது போல் இன்று சரியவில்லை என்றாலும் இரண்டாவது நாளாக இன்றும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பங்குச்சந்தை வரும் நாட்களில் உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்