பங்குச்சந்தை 2வது நாளாக சரிவு... ஆனாலும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை..!

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (10:41 IST)
பங்குச்சந்தை நேற்று குறைந்த அளவில் சரிந்த நிலையில் இன்றும் குறைந்த அளவில் இரண்டாவது நாளாக சரிந்து உள்ளது. இருப்பினும் பங்குச்சந்தை மிக அதிகமாக உயர்ந்துள்ளதால் இந்த சரிவு சாதாரணமானது தான் என்றும் மீண்டும் பங்குச்சந்தை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும்  முதலீட்டாளர்கள் நம்பிக்கை உடன் உள்ளனர். 
 
மும்பை பங்குச்சந்தை இன்று 83 புள்ளிகள் குறைந்து 71,231 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 33 புள்ளிகள் சரிந்து 21,385 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
 டாட்டா, கோல் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிசி ஆகிய பங்குகள் இன்று உயர்ந்துள்ளது என்பதும் விப்ரோ, அதானி, ஹீரோ மோட்டார், டெக் மகேந்திரா ஆகிய பங்குகள் இன்று சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்