2 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

புதன், 20 டிசம்பர் 2023 (10:52 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்ந்து 71,810 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை யானிட்டி 120 புள்ளிகள் உயர்ந்து 21,572 புள்ளிகள் என்று வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்கள் சரிந்த புள்ளிகளை விட இன்று ஒரே நாளில் உயர்ந்த புள்ளிகள் அதிகம் என்பதால் முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் மீண்டும் முதலீடு செய்து வருகின்றனர்.
 
ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் தகுந்த ஆலோசனை பெற்று முகநூலில் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்