இன்றைய பங்குச்சந்தை நிலவரம் எப்படி? சென்செக்ஸ், நிப்டி விவரங்கள்..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (11:59 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை பெரிய மாற்றம் இன்றி வர்த்தகம் ஆகி வருகிறது.  

நேற்றைய நிலையில் இருந்து இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 3 புள்ளிகள் மட்டுமே குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஏற்றத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.

அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிஃப்டி வெறும் 10 புள்ளிகள் மட்டுமே குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பங்குச் சந்தையில் பெரிய ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லை என்பதால் வர்த்தகமும் சுமாராகவே உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் வரும் நாட்களை பங்கு சந்தை மீண்டும் உச்சம் பெறும் என்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்