பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

வெள்ளி, 17 நவம்பர் 2023 (10:48 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி கிட்டத்தட்ட நேற்றைய நிலையிலேயே வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ், வெறும் 9 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 65 ஆயிரத்து 985 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 26 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 19,791  இந்த புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது

பங்குச்சந்தை காலையில் ஏற்ற இறக்கமின்றி இருந்தாலும் மதியத்திற்கு மேல்  ஏற்றத்துடன் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்த நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இருப்பினும் முதன்முதலாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று சரியான நேரத்தில் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்