81000ஐ தாண்டியது சென்செக்ஸ்.. தொடர் ஏற்றத்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:29 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்செக்ஸ் 81 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பது முதலீட்டாளர்கள் மகிழ்ச்சிக்கு இன்னொரு முக்கிய காரணமாகவும். 
 
இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கிய நிலையில் சற்று முன் சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து 81,096 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 56 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 819 என்ற புள்ளிகளை வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கல்யாண் ஜூவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு, ஸ்டேட் வங்கி, சவுத் பேங்க் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ், கரூர் வைசியா வங்கி, ஐடிசி, சிப்லா உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்