ஏற்ற இறக்கத்துடன் இன்றைய பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva

திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (11:11 IST)
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது ஏற்றத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இறக்கத்தில் இருப்பதால் பங்குச்சந்தை இன்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கப்பட்ட இருந்து வரும் நிலையில் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 89 புள்ளிகள் குறைந்து 80 ஆயிரத்து 355 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 11 புள்ளிகள் குறைந்து 24 ஆயிரத்து 530 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்று காலை பங்குச் சந்தை உயர்ந்தாலும் தற்போது சிறிய அளவில் குறைந்திருப்பதை அடுத்து மீண்டும் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய பங்கு சந்தையில் ஐடிசி, கல் கரூர் வைஸ்யா வங்கி, மணப்புரம் கோல்டு, ஸ்டேட் பேங்க் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிடல், சிப்லா, கல்யாண் ஜூவல்லர்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்