இறங்கிய வேகத்தில் ஏறும் பங்குச்சந்தை.. உச்சத்தை நோக்கி செல்லும் நிப்டி..!

Siva

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (09:41 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த வாரம் திடீரென பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தை திடீரென உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 755 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 856 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 228 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 375 என உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல்,  சிப்லா, ஐடிசி, கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கோல்ட் பீஸ் , கல்யாண் ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்