நேற்று 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்.. இன்றைய நிலை என்ன?

Siva
வெள்ளி, 24 மே 2024 (11:12 IST)
பங்குச்சந்தை நேற்று காலை தொடங்கிய போது 500 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் முடியும் போது 1000 புள்ளிககளுக்கும் அதிகமாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை நிலைமை என்ன என்பதை தற்போது பார்ப்போம். இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
 மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 25 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 75 ஆயிரத்து 450 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி வெறும் 11 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 22978 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்று முழுவதுமே பங்குச்சந்தையில் பெரிய ஏற்ற இறக்கம் இருக்காது என்று தான் கூறப்பட்டு வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்