மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva

வியாழன், 23 மே 2024 (12:13 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென மீண்டும் உச்சம் சென்றதை எடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை முதல் உயர்ந்து வரும் நிலையில் சற்று முன் 533 புள்ளிகள் உயர்ந்து 74 ஆயிரத்து 752 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 22 ஆயிரத்து 760 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை ஒரே நாளில் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளதும் 74 ஆயிரத்துக்கும் மேல் சென்செக்ஸ் சென்றுள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்றைய பங்குச் சந்தையை பொறுத்தவரை ஐடிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், என்டிபிசி பவர் கிரேட் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே குறைந்துள்ளதாகவும் மற்ற அனைத்து பங்குகளும் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்